Connect with us

இனி எப்படி தேர்தலுக்கு செலவு பண்றது..? காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்

Ajay_Maken

Politics

இனி எப்படி தேர்தலுக்கு செலவு பண்றது..? காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்

லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கட்சி வழங்கிய காசோலைகளை வங்கிகள் நிராகரிப்பதாக நேற்று தகவல் கிடைத்தது என்றும், தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தெரியவந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ரூ.210 கோடியை வசூலிப்பதற்காக வருமான வரித்துறை கணக்குகளை முடக்கியுள்ளது என்று கூறிய அஜய் மாக்கன், இது தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் என்றார்.

மேலும், தேர்தலுக்கு 2 வாரங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கணக்கு முடக்கப்பட்டால் அது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம் என கடுமையாக விளாசியுள்ளார். இதனால் கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார். மேலும், இந்த நாட்டில் பல கட்சி அமைப்பைக் காப்பாற்றவும், இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் நீதித்துறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Politics

To Top