Connect with us

“பிக் பாஸுக்கே இதான் ஆசை..! விஷ்ணு என்ன இப்படி சொல்றாரு?! வெளியான Promo”

Bigg Boss Tamil Season 7

“பிக் பாஸுக்கே இதான் ஆசை..! விஷ்ணு என்ன இப்படி சொல்றாரு?! வெளியான Promo”

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய நபர்கள் குறித்து தினேஷ் மற்றும் விஷ்ணு உரையாடல் செய்யும் காட்சிகள் இரண்டாவது ப்ரோமோவில் உள்ளன.

இதில் விஷ்ணு கூறிய போது ’மாயாவ லைட்டா அடிச்ச உடனே யாருக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் ஓட்டெல்லாம் சிதற விட்டுட்டாங்க’ என்று கூறுகிறார். அதற்கு ’விக்ரம் எஸ்கேப் ஆனதெல்லாம் மிராக்கிள்’ என்று தினேஷ் கூறுகிறார்.

அப்போது ’நிக்ஸன், மணி, அக்ஷயா ஆகியவர்கள் எல்லாம் போர கேசுங்க, இவங்களை அனுப்பிவிட்டு வெளியில் இருந்து மூன்று பேரை உள்ளே கொண்டு வந்து கேமை இன்ட்ரஸ்டிங்கா ஆக்கலாம் என்று பிளான் இருக்கலாம் என்று விஷ்ணு கூற, அதை தினேஷும் அதை ஆமோதிக்கிறார்.

மொத்தத்தில் இனி அடுத்தடுத்த வாரங்களில் யாரை வெளியேற்றுவது? வெளியே இருந்து உள்ளே வருபவர்களை எப்படி சமாளிப்பது? போன்ற திட்டங்களை தினேஷ் மற்றும் விஷ்ணு செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இயக்குநர் ஆகும் அமரன் பட நடிகை! ஷாக்கிங் தகவல்!

More in Bigg Boss Tamil Season 7

To Top