Connect with us

‘தண்டகாரண்யம்’ படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியானது..!!

Cinema News

‘தண்டகாரண்யம்’ படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியானது..!!

‘தண்டகாரண்யம்’ படத்தின் முதல் சிங்கள் பாடலான ‘அடியே அலங்காரி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ப.ரஞ்சித்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கால் பதித்த இளம் நடிகர்கள் தான் அட்டகத்தி தினேஷ் மற்றும் , கலையரசன். இவர்களது நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அவர்களுக்கும் நல்ல பெயரை எடுத்துக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த இரு நடிகர்களும் தற்போது ஒரே படத்தில் நடிக்க ஒப்பந்தமான படமே தண்டகாரண்யம் . அதியன் ஆதிரை இயக்கி வரும் இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீளம் புரொடக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘தண்டகாரண்யம்’ படத்தின் முதல் சிங்கள் பாடலான ‘அடியே அலங்காரி’ பாடல் இதோ உங்களுக்காக..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top