Connect with us

பிக் பாஸ் ஜோவிக்காவுக்கு அடித்த ஜாக்பாட் – பிரபல இயக்குநருடன் துணை இயக்குநராகும் வாய்ப்பா..?

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் ஜோவிக்காவுக்கு அடித்த ஜாக்பாட் – பிரபல இயக்குநருடன் துணை இயக்குநராகும் வாய்ப்பா..?

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட் ஆன ஜோவிக்கா பிரபல இயக்குநருடன் துணை இயக்குநராக சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தினசரி எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 மாதங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆட்டம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது . அதிலும் குறிப்பாக இந்த வார கேப்டனாக தேர்வாகி இருக்கும் விஷ்ணுவின் தலைமனையின் கீழ் என்ன பிரச்சனைகள் வர போகிறது என்பதை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இத்தனை நாட்கள் சிறப்பாக விளையாடி வந்த ஜோவிக்கா கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜோவிக்கா தற்போது பிரபல இயக்குநருடன் துணை இயக்குநராக பணியில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஜோவிக்கா தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வருங்காலத்தில் கண்டிப்பாக ஜோவிகா ஒரு நடிகையாகவோ அல்லது இயக்குனராகவோ களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Bigg Boss Tamil Season 7

To Top