Connect with us

அனிருத் ரிசப்ஷனில் விஜய் – சங்கீதா.. யாரும் எதிர்பார்க்காத வருகையால் பரபரப்பு

Cinema News

அனிருத் ரிசப்ஷனில் விஜய் – சங்கீதா.. யாரும் எதிர்பார்க்காத வருகையால் பரபரப்பு

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் கலந்துகொண்டு மணமக்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர். விஜய் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் வருகையைவிட அதிகமாகப் பேசப்படுவது அவரது மனைவி சங்கீதாவின் வருகைதான்!

ஆம், விஜய் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவருடன் சங்கீதா வரவில்லை. விஜய் தனியாக வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்ற நிலையில், சங்கீதாவும் அதே நிகழ்ச்சியில் தனியாகக் கலந்துகொண்டார். அவரும் அனிருத் மற்றும் காவ்யா மாறனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

ஏற்கனவே விஜய் – சங்கீதா இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகப் பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, இருவரும் நீண்ட நாட்களாகப் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தென்படாத நிலையில், ஒரே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், விஜய் மற்றும் சங்கீதாவின் தனித்தனி வருகை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அனிருத் – காவ்யா மாறனின் திருமண வரவேற்பு பல நட்சத்திரங்களின் வருகையால் களைகட்டியிருந்தாலும், விஜய் – சங்கீதாவின் இந்தத் தனித்தனி வருகைதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் தொலைக்காட்சியில் புதிய போட்டி: ‘தமிழ் ஐடல்’, ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப்’ மூலம் சோனி விழா என்ன வழங்குகிறது?

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top