Connect with us

பிக் பாஸ் வீட்டில் நிக்சனுக்கு எதிராக ஒன்று கூடி நாமினேட் செய்த ஹவுஸ் மேட்ஸ்..!! வெளியான வைரல் ப்ரோமோ..

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் நிக்சனுக்கு எதிராக ஒன்று கூடி நாமினேட் செய்த ஹவுஸ் மேட்ஸ்..!! வெளியான வைரல் ப்ரோமோ..

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வந்துள்ள புதிய ப்ரோமோ செம வைரல் ஆகி வருகிறது .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தினசரி எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 மாதங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆட்டம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது . அதிலும் குறிப்பாக இந்த வார கேப்டனாக தேர்வாகி இருக்கும் விஷ்ணுவின் தலைமனையின் கீழ் என்ன பிரச்சனைகள் வர போகிறது என்பதை காண ரசிகர்க செம ஆளாக உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்குமான புதிய ப்ரோமோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது . அந்த புரோமோவில் நாமினேஷன் ப்ராசஸ் நடக்கிறது அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்று சேர்ந்து நிக்சனை டார்கெட் செய்து அவரை நாமினேட் செய்வது போல் காட்சிப்படுத்தப்படுகிறது.

அதற்கேற்ப ஸ்மால் பாஸ் இந்த வார நாமினேஷனில் நிக்சன் மட்டும் தான் நாமினேட் ஆகியுள்ளதாக கூற ப்ரோமோ அப்படியே முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top