Connect with us

ரியோவின் ‘ஜோ’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய முன்னணி இயக்குநர்கள் – செம குஷியில் ஜோ படக்குழு..

Cinema News

ரியோவின் ‘ஜோ’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய முன்னணி இயக்குநர்கள் – செம குஷியில் ஜோ படக்குழு..

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜோ படத்தை பார்த்த தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் இருவரும் படக்குழுவை பாராட்டி போட்டுள்ள ட்வீட் தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

ஹரிஹரன்ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜோ. முழுக்க முழுக்க காதலை மையமான கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரியோவுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு , கெவின் , ராகேஷ் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் ரசியகர்கள் மத்தியில் நல்ல வரவேற்று பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள நிலையில் ஜோ படத்தை தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் இருவரும் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி போட்டுள்ள ட்வீட் தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

இயக்குநர் நெல்சன் போட்டுள்ள டீவீட்டில் :

“ ஜோ படத்தை மிகவும் ரசித்தேன் வேடிக்கையான ரோலர் கோஸ்டர் உணர்ச்சிகளுடன் படம் உள்ளது, படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இந்த பக்கம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டுள்ள டீவீட்டில் :

” ஜோ படம் பார்த்தது இனிமையான உணர்வை கொடுக்கிறது. அனைவரின் உழைப்பும் அழகாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள் “ என பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் திருமணத்தை பார்க்க உங்களுக்கு அவ்ளோ அவசரமா - நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!

More in Cinema News

To Top