Connect with us

ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்..! தல, தளபதி படத்தில் நடித்து பிரபலமானதால் கிடைத்த வாய்ப்பு!

Cinema News

ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்..! தல, தளபதி படத்தில் நடித்து பிரபலமானதால் கிடைத்த வாய்ப்பு!

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய படங்களில் நடித்த பிக் பாஸ் பிரபலம் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சிபி.

இவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ அஜித் நடித்த ’துணிவு’ சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிபி ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் உதவியாளர்களில் ஒருவரான பிரகாஷ் கிருஷ்ணன் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தில் தான் சிபி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ’ஜீவி’ திரைப்படத்தில் கதை எழுதிய பாபு தமிழ் திரைக்கதை எழுத, இந்த படத்திற்கு கபீர் வாசுகி இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநிலையை கொண்ட கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ’எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு - வேதனையுடன் அறிவித்த கங்கனா..!!

More in Cinema News

To Top