Connect with us

மன்சூர் அலிகானை விமர்சித்து மெகாஸ்டார் சிரஞ்சீவி ட்வீட்..!

Cinema News

மன்சூர் அலிகானை விமர்சித்து மெகாஸ்டார் சிரஞ்சீவி ட்வீட்..!

நடிகர்/வில்லன் மன்சூர் அலிகானின் கீழ்த்தரமான பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் தனது பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்..அவரின் இந்த ட்வீட் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்கவில்லை என கேவலமாக அனைவரும் அசிங்கமாக நினைக்க வைக்கும் வகையில் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார்..

இதில் திரிஷா பெயரை பயன்படுத்தி கீழ்த்தரமாக பேசியிருந்தார் அவர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை த்ரிஷா இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்…இப்படியெல்லாமா பேசுவாங்க என பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்…

தொடர்ந்து இந்த சர்ச்சை பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்சூர் அலிகான் ஏற்கனவே இதற்கு அலட்சியமாக விளக்கமளித்திருந்தார் பலரும் இவரின் மீது வழக்குகள் கூட போட்டு இருக்கின்றனர்..

இந்த நிலையில் இன்று நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து மன்சூர் அலிகானின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்….அதில் திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல ஒரு பெண்ணுக்கும் அருவறுக்கத்தக்க வகையில் உள்ளது…

இப்படி நீங்கள் பேசியது தவறு..நான் த்ரிஷா பக்கம் தான் இருப்பேன் என கோபமாக விமர்சனத்தை டீவ்ட்ட்டாக போட்டு இருக்கின்றார் இந்த ட்வீட் அதிகம் பேசப்பட்டு வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதானா?!"

More in Cinema News

To Top