Connect with us

காதலர் தினத்தன்று கண்டுபிடிக்கப்பட்ட 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் – அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!!

Featured

காதலர் தினத்தன்று கண்டுபிடிக்கப்பட்ட 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் – அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!!

காதலர் தினமான இன்று 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப் 14 இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கு பிடித்தவர்களிடம் தங்களது காதலை பலவிதமாக காட்டி வரும் ஒரு ஸ்பெஷல் ஆன நாள் இன்று.

இந்நிலையில் இந்த அற்புதமான நாளை இன்னும் சிறப்பமாக மாற்றும் வகையில் 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் தான் இந்த 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் கடந்த 2017ல் ஏலத்தில் வாங்கிய ஒரு பெட்டியில் இந்த அற்புதமான காதல் கடிதம் கிடைத்துள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து வந்துள்ள இக்கடிதத்தில் ‘கடந்த கால சண்டைக்காக மன்னிப்பு கேட்கிறேன். விரைவில் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை படித்து நெகிழ்ந்துபோன ரிக் ட்ரோஜனோவ்ஸ் இக்கடிதத்தை எப்படியாவது உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

More in Featured

To Top