Connect with us

பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘SK23’ படம் – வைரல் போட்டோஸ்

Cinema News

பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘SK23’ படம் – வைரல் போட்டோஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK23’ படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது .

தமிழ் சினிமாவில் ரமணா , கஜினி , 7 ஆம் அறிவு உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் .

தமிழ் உள்பட பல மொழி படங்களை தயாரித்தும் இயக்கியும் வரும் இயக்குநர்
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இயக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து சென்னையில் இன்று இப்படத்தின் பூஜை சத்தமின்றி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதுமட்டுமினிற் நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனித்துவமான கதைகளுக்கு பெயர்போன இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் நம்ப எஸ்.கே அவர்களை வைத்த எந்த மாதிரியான கதையினை நமக்கு படமாக எடுத்து கொடுக்க போகிறார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிவகார்த்திகேயன் தயாரிக்கும் குரங்கு பெடல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

More in Cinema News

To Top