Connect with us

“பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி, வசூல் வேட்டை நடத்திய 5 படங்கள்?! யாரு டாப் தெரியுமா?!”

Cinema News

“பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி, வசூல் வேட்டை நடத்திய 5 படங்கள்?! யாரு டாப் தெரியுமா?!”

1st Place – LEO:

இந்த ஆண்டு வெளியான படங்களில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்களுக்கு இடையே தான் வசூலில் சரியான போட்டி நிலவியது. 540 கோடி வரை இந்த படம் அதிகாரப்பூர்வ வசூல் என அறிவிக்கப்பட்ட நிலையில், 625 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டும் லோகேஷ் இயக்கிய விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டும் லியோ வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

2nd Place – Jailer:

F5K8IWibUAAt3a3 (2)

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 525 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 607 கோடி வசூல் வரை மொத்தமாக ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

3rd Place – Ponniyin Selvan:

Ponniyin-Selvan-Part-Two

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 350 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவு வசூலை ஈட்டிக் கொடுத்துள்ளது.

4th Place – Varisu:

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு என்டர்டெயின்மென்ட் படமாக வெளியானாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும், அந்த படம் 300 கோடி வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

5th Place – Thunivu:

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பேங்க் ஹெயிஸ்ட் படமாக உருவான துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கான தரமான சம்பவமாக அமைந்திருந்தது. 200 கோடி ரூபாய் வசூலை அந்த படம் இந்த ஆண்டு வாரிசு படத்துடன் போட்டி போட்ட நிலையில், ஈட்டியது. சோலோவாக வெளியாகி இருந்தால் அதிக வசூலை ஈட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top