Connect with us

“நடிகர் மாதவன் எழுதி நடிக்கும் படத்தை இயக்கும் தனுஷ் பட இயக்குனர்! படத்தின் பெயர் இதுதானா?!”

Cinema News

“நடிகர் மாதவன் எழுதி நடிக்கும் படத்தை இயக்கும் தனுஷ் பட இயக்குனர்! படத்தின் பெயர் இதுதானா?!”

ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியான படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2000 ஆவது ஆண்டில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “அலைபாயுதே” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் மாறி உள்ளார் மாதவன்.

அலைபாயுதே படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், ரன் மற்றும் அன்பே சிவம் என்று தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த மாதவன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். அண்மையில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள மாதவன் இறுதியாக தமிழில் வெளியான ராக்கெட்டரி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது அவரே இயக்கி, தயாரித்து வெளியிட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது தமிழில் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் மாதவன் பிரபல நடிகர் தனுஷ் அவர்களை வைத்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை மாதவன் எழுதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு “அதிர்ஷ்டசாலி” என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வெளிநாடுகளில் தற்பொழுது பிஸியாக நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மூத்த தமிழ் நடிகை ராதிகா நடித்த வருகிறார். மாதவனின் நாயகியாக -பிரபல கன்னட நடிகை ஷர்மிளா மன்றே நடித்து வருகின்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பூஜையுடன் தொடங்கிய நடிகர் கவினின் அடுத்த படம் - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top