Connect with us

மனித – வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரண தொகையை உயர்த்தியது தமிழக அரசு..!!

Featured

மனித – வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரண தொகையை உயர்த்தியது தமிழக அரசு..!!

மனித – வனவிலங்கு மோதல்களில் பரிதாபமாக போகும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகையினை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிருப்பதாவது :

மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித-வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு.

தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி (Corpus Fund) ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மனித-வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

முதலமைச்சரின் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா..? திமுகாவின் சர்ச்சை பேச்சாளரை வச்சு செய்த ராதிகா..!!

More in Featured

To Top