Connect with us

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்சனா..? பிக் பாஸ் அய்யா என்ன சொல்றிங்க..

Bigg Boss Tamil Season 7

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்சனா..? பிக் பாஸ் அய்யா என்ன சொல்றிங்க..

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் என்ற ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் 4 ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து திட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன நிலையில் டபுள் எவிக்சன் சிங்கிள் எவிக்சன் என மாறி மாறி சிறப்பான தரமான சம்பவங்கள் பல நடைபெற்று வருகிறது . அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் விசித்ரா, அர்ச்சனா, மணி, ரவீனா, பிராவோ, அக்ஷயா, மாயா, பூர்ணிமா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .

இதற்கிடையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக எவிட் ஆன போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் வர உள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார். பிக் பாஸ் கொடுக்கும் 3 போட்டிகளில் ஹவுஸ்மேட்ஸ் ஜெயித்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக தோற்றுவிட்டால் ஏற்கனவே போட்டியிலிருந்து எலிமினேட் ஆனவர்கள் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வருவார்கள். அதன் படி நடந்த மூன்று போட்டிகளில் ஹவுஸ்மேட்ஸ் இரண்டில் தோற்றுவிட்டனர். அதனால் இந்த வாரம் டபுல் எவிக்ஷன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top