Connect with us

பிக் பாஸ் புகழ் பூர்ணிமா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு

Cinema News

பிக் பாஸ் புகழ் பூர்ணிமா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு

பிக் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கிச்சென்ற பிக் பாஸ் புகழ் பூர்ணிமா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்படுவது வழக்கம் .

அந்த பெட்டியில் வைக்கப்படும் குறிப்பிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் தாங்களாகவே இந்த நிகழ்ச்சியில் இவர்ந்து மன நிறைவுடன் வெளியேறுவர் .

அந்த வகையில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை பூர்ணிமா நைசாக எடுத்து சென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே யூடியூபில் செம பேமஸ் ஆக இருந்த அவர் சினிமாவிலும் நடித்திருந்தார் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பூர்ணிமா நடித்த அன்னபூரணி திரைப்படம் வெளியானது. இதையடுத்து, அவர் நாயகியாக நடித்த செவப்பி என்ற படமும் வௌியானது.

இந்நிலையில் தற்போது பூர்ணிமாவின் நடிப்பில் அடுத்த படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ஹரி மகாதேவன் என்பவர் இயக்கும் இப்படத்தை , கோவை பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் செம பாபுலாராக இருந்து வரும் பூர்ணிமா நடிக்கும் அந்த புதிய படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் வைரல் போட்டோஸ் இதோ..!!

More in Cinema News

To Top