Connect with us

இந்த வீட்ல பூர்ணிமா இருக்கனும் இல்ல நான் இருக்கனும் – வைரலாகும் நாமினேஷன் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

இந்த வீட்ல பூர்ணிமா இருக்கனும் இல்ல நான் இருக்கனும் – வைரலாகும் நாமினேஷன் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் ப்ரோமோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தினசரி எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து திட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன நிலையில் டபுள் எவிக்சன் சிங்கிள் எவிக்சன் என மாறி மாறி சிறப்பான தரமான சம்பவங்கள் பல நடைபெற்று வருகிறது . அந்த வகையில் கடந்த வார நாமினேஷனில் இருந்த பிராவோ மற்றும் அக்ஷயா எலிமினேட் ஆக வைல்ட் கார்ட் எண்ட்ரியாக விஜய் மற்றும் அனன்யா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷன் நடந்துள்ளது இதுகுறித்து இன்று வெளியான ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அவரவர்களுக்கு பிடிக்காதவர்களை நாமினேட் செய்துவர திடிரென மாயா , பூர்ணிமாவை நாமினேட் செய்து அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.

இந்த பிக் பாஸ் வாயில் ஒன்னு நான் இருக்கணும் இல்ல அவங்க இருக்கனும் என மாயா அனைவர் முன் சொல்ல மனமுடைந்த பூர்ணிமா ஓரமாக சென்று கண்ணீர் விடுகிறார் அப்படியே அந்த ப்ரோமோவும் முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top