Connect with us

“பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எவிக்ட் ஆகப்போவது இவர்கள் தானா?!”

Bigg Boss Tamil Season 7

“பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எவிக்ட் ஆகப்போவது இவர்கள் தானா?!”

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வார இறுதியில் மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் உள்ளே வரப் போகிறார்கள் என்றும் ஒரு சில போட்டியாளர்கள் வெளியேற போகிறார்கள் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

குறைந்தது இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் மாயா, அக்‌ஷயா, மணி, அர்ச்சனா, ரவீனா, விசித்ரா, பூர்ணிமா, பிராவோ ஆகிய 8 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில் அவர்களில் இரண்டு போட்டியாளர்கள் தற்போது வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

அவர்கள் அக்ஷயா மற்றும் பூர்ணிமா. இருவரும் மாயாவின் புல்லிங் குரூப்பில் இருந்ததாக விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இருவரும் ஒரே நாளில் வெளியேறுவதால் புல்லிங் குரூப்பின் நிலை இனி என்ன ஆகும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பூர்ணிமா மற்றும் அக்‌ஷயா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறினாலும், மேலும் 3 பேர் உள்ளே வரவிருப்பதால் இனி போட்டியாளர்களுக்குள் அதிக போட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக மாற்ற கிரியேட்டர்கள் பல்வேறு அதிரடிகளை செய்துவரும் நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top