Connect with us

ராகுல் காந்தியின் மீது குற்றச்சாட்டு வைத்த பாஜக…கணக்கை முடக்குங்கள்!

Politics

ராகுல் காந்தியின் மீது குற்றச்சாட்டு வைத்த பாஜக…கணக்கை முடக்குங்கள்!

இன்று(25.11.23)199 தொகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்தது வருகின்றது…இது பெரும் அளவில் பேசப்பட்டும் வருகின்றது,இது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நடக்கும் ஒரு நேரடி தேர்தல் போராகவே இருக்கின்றது…காலை ஏழு மணி முதல் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்..என்றும் சொல்லலாம்…

மொத்தம் 200 தொகுதிகள் கொண்ட இந்த தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் இறந்த நிலையில் அந்த தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அதனை போல டிசம்பர் 3ம் தேதி இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது…இந்த முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்..

இப்படி இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் தளத்தை முடக்குமாறு ராஜஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை தற்பொழுது எழுதியுள்ளது பாஜக…

இது பெரும் சர்ச்சையாகி வருகின்றது…அந்த கடிதத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரச்சாரங்கள் மற்றும் பிற தேர்தல் சார்ந்த விஷயங்களை அந்தந்த கட்சிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பது தான் தேர்தல் ஆணைய விதி…அதை தான் எல்லாரும் பின்பற்றவும் வேண்டும் ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லை என்றும் சொல்லலாம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இதை மீறி இன்று காலை வெளியிட்ட அவரது ட்விட்டர் பதிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து ஒரு பதிவை அவர் போட்டுள்ளார்…இது கடைசி நேரத்தில் மக்களை ஏமாற்றவும் செயலாகும் என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்…இப்படி ஒரு செயல் இருப்பதால் அவரின் கணக்கை முடக்குங்கள் என கருத்தை சொல்லி இருக்கின்றது பாஜக கட்சி..என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்..

More in Politics

To Top