Connect with us

நான் பேசியதில் தவறே இல்லை…குஷ்பு கொடுத்த விளக்கம்!

Politics

நான் பேசியதில் தவறே இல்லை…குஷ்பு கொடுத்த விளக்கம்!

சேரி என்ற சொல்லை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில்..அதற்கு இப்போது பதிலாக சொல்லிய விவரமும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது…நான் சொல்லியதில் தவறே இல்லை என்றும் சொல்லி இருக்கின்றார்…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பேசியதாவது சேரி என்பதை நான் நகைச்சுவையாக கூறினேன்.அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம்…அதற்கான விளக்கமும் நான் போட்டு இருந்தேன்…

எப்போதுமே என்னுடைய பதிவுகளில் நகைச்சுவை இருக்கும் ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தையை பேசுபவர்களை கேட்காமல் நான் ஒரு வார்த்தையை சொன்னதற்காக என்னை கேட்கிறார்கள் எனக்கு தெரிந்த மொழியில் தான் நான் பேச முடியும்…இதில் தவறு உங்களுக்கு வேண்டும் என்றால் இருக்கலாம் நான் அப்படி பார்க்கவில்லை…

நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை பயந்து பின்வாங்கும் ஆள் நான் கிடையாது சேரி என்று கூறியதற்காக நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அரசு பதிவுகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது அதாவது வேளச்சேரி,செம்மஞ்சேரி ஆகிய பெயர்களுக்கு என்ன சொல்வீர்கள் என்று குஷ்பு தெரிவித்தார்…இதற்கு பல மாற்று கருத்துகளும் இருந்து வருகின்றது…

இந்த பிரச்சனை ஆரம்பமானது எப்போது என்றால் , மன்சூர் அலி கான் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ட்விட்டர் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த குஷ்பு திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள்.அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான் சாரி என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது என பதிவிட்டிருந்தார்…

அப்படி அவர் சொல்லியது தான் இப்போது மிக பெரிய சர்ச்சையை கொடுத்து இருக்கின்றது,அதனால் நீங்கள் வேண்டும் என்றால் தவறாக எடுத்துக்கோங்க நான் இல்லை என சொல்லி சென்றார் குஷ்பு.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Politics

Advertisement
 

Trending

 
Advertisement
To Top