Connect with us

இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு..!! பேட்டிங்கில் மிரட்டுமா இந்திய அணி..?

Featured

இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு..!! பேட்டிங்கில் மிரட்டுமா இந்திய அணி..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது .

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் , ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும் , டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.கெபேஹாவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாதிக்குமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் .

இந்நிலையில் இன்று நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பள்ளி கணக்கு பாடத்தில் சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்கிடுக - ஜவாஹிருல்லா வேண்டுகோள்..!!

More in Featured

To Top