Connect with us

தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ’லால் சலாம்’ படத்தில் அவரது கதாபாத்திரமான மொய்தீன் பாயின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

Cinema News

தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ’லால் சலாம்’ படத்தில் அவரது கதாபாத்திரமான மொய்தீன் பாயின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ’லால் சலாம்’ படத்தில் அவரது கேமியோ கதாபாத்திரமான மொய்தீன் பாயின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அன்புமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் படு மிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லால்சலாம். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க . மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகளின் ஆசைக்காக நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைய தற்போது இந்த படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ’லால் சலாம்’ படத்தில் அவரது கேமியோ கதாபாத்திரமான மொய்தீன் பாயின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே தலைவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படக்குழு வெளியிட்டுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Cinema News

To Top