Connect with us

இதுக்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தியா – ரவீனாவை திட்டித்தீர்த்த அவரது தாய் – வைரல் ப்ரோமோ..!!

Bigg Boss Tamil Season 7

இதுக்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தியா – ரவீனாவை திட்டித்தீர்த்த அவரது தாய் – வைரல் ப்ரோமோ..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ செம வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த freeze task விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வவருவராக என்ட்ரி கொடுக்க சிரிப்பும் அழுகையும் கலந்த மிக்ஸட் எமோஷனலில் பிக் பாஸ் வீடே மூழ்கியுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் ரவீனாவின் அம்மா மற்றும் அண்ணா என்ட்ரி கொடுக்கின்றனர் . வந்தவர்கள் ரவீனாவை தனியாக கூட்டி சென்று இதுக்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தியா உன்ன பாத்தோன கன்னத்துல அறையாலாம் என்று தான் நினைத்தேன் என ரவீனாவின் அம்மா செம திட்டு திட்டுகிறார்.

இவர்களின் இந்த உரையாடலை மணி பெட் ரூமுக்குள் இருந்து மரண பீதியில் பார்க்கிறார் . இதையடுத்து மணி மற்றும் ரவீனா இருவரையும் அழைத்து இனி நீங்கள் பேசிக்கொள்ளாதீர்கள் குறிப்பாக மணி நீங்கள் என்ன மகளிடம் தனியாக அழைத்து பேசுவதை அறவே நிறுத்திக்கொள்ளுங்கள் என ஸ்ட்ரீட்டாக கூற ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி - காதலன் உயிரிழப்பு..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top