Connect with us

பிக் பாஸ் வீட்டில் விஷ்ணுவால் கண்ணீர்விடும் பூர்ணிமா – வெளியான திக் திக் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் விஷ்ணுவால் கண்ணீர்விடும் பூர்ணிமா – வெளியான திக் திக் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வந்துள்ள புதிய ப்ரோமோ செம வைரல் ஆகி வருகிறது .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தினசரி எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 மாதங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆட்டம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது . அதிலும் குறிப்பாக இந்த வார கேப்டனாக தேர்வாகி இருக்கும் விஷ்ணுவின் தலைமனையின் கீழ் பச்சமில்லாமல் பிரச்சனைகள் மேல் பிரச்சனை வந்து வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறது .

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்குமான புதிய ப்ரோமோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது . அந்த புரோமோவில் பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார் இந்த டாஸ்கில் 5 ஸ்டார் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் போட்டியாளர்கள் இந்த ஸ்டாரை பெறுவதற்கும் போட்டியிடலாம் என்றும் இந்த ஸ்டார் மற்றவர்கள் பெற கூடாது என்பதற்காகவும் போட்டியிடலாம் என விதிமுறைகளை கூற விஷ்ணு சாத்தியமா என்னை அட்டாக் பண்ணுவார் என்னால் இனி இங்கு இருக்க முடியாது என கண்ணீருடன் மாயாவிடம் புலம்புகிறார் பூர்ணிமா அப்படியே இந்த ப்ரோமோவும் முடிகிறது.

ஆரம்பத்தில் ஸ்ட்ராங் பிளேயர் என கருதப்பட்ட பூர்ணிமா கடந்த சில எபிசோடுகளாக கண்ணீருடன் சோர்வாக காணப்படுவது அவர்மேல் இருக்கும் எதிர்பார்ப்பை குறைக்க வைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top