Connect with us

மோடியின் சாதி குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய ராகுல் காந்தி

Modi_Rahul_Gandhi

Politics

மோடியின் சாதி குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்திய ராகுல் காந்தி

பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தனது ஜாதி குறித்து பொய் கூறியதாகவும், பிரதமர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) அல்ல என்றும் தெரிவித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ஓபிசி பிரிவில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் டெலி சாதியில் பிறந்தார். ஓபிசியில் பிறக்காததால் அவர் வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டார்.” என்று கூறினார்.

முன்னதாக, 2014இல் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டபோதும் இதே சர்ச்சை பாஜகவை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்பட்டது. மேலும், 2002இல் மோடி முதல்வராக இருக்கும்போதுதான் அவர் சார்ந்த டெலி சாதி ஓபிசி பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், இதற்காக முன்னெடுப்புகள் 1990களிலேயே தொடங்கியதாகவும், அறிவிப்பு வரும்போது முதல்வராக இருந்தார் என்பதற்காக மோடியே இதை செய்துகொண்டார் எனக் கூறுவது சரியல்ல என்றும் ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட்டதை அடுத்து விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.

இந்நிலையில், தற்போது ராகுல் காந்தி அந்த விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

More in Politics

To Top