Connect with us

“BB7: ஐஷுவிடம் எல்லை மீறும் நிக்சன்! கொந்தளிக்கும் மக்கள்! இப்போ இது Women சேஃப்டியில் வராதா?!”

Bigg Boss Tamil Season 7

“BB7: ஐஷுவிடம் எல்லை மீறும் நிக்சன்! கொந்தளிக்கும் மக்கள்! இப்போ இது Women சேஃப்டியில் வராதா?!”

பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தான் மாயா மற்றும் பூர்ணிமா குரூப் அவரை சதி செய்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டதாக குற்றஞ்சாப்பட்டுகிறது. ஆனால் உண்மையாகவே பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்கள் இன்னும் உள்ளே இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது சில வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக ஐஷுவிடம் நிக்சன் எல்லை மீறும் காட்சிகளின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இருவரும் மைக்கை கழட்டி விட்டு பேசுவது, கண்ணாடியில் முத்தம் கொடுப்பது, ஒரே தட்டில் சாப்பிடுவது, சில்மிஷம் செய்வது, அனைவர் முன்னிலையில் ஐஷுவை நிக்சன் தூக்கிக்கொண்டு செல்வது, ஐஷு படுத்திருக்கும் போது புருவத்தை தடவி உன்னுடைய கண்ணு அழகா இருக்கு என்று இங்கிதம் இல்லாமல் வர்ணிப்பது ஆகிய காட்சிகள் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி நிக்சன் மற்றும் ஐஷுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஐஷு வேஷ்டி கட்டிருந்த நிலையில் ’என்ன இப்படி கட்டி இருக்கிறாய் என்று அவரது வேட்டியை சரி செய்யும் சாக்கில் வேட்டியை நகர்த்தி காலை தடவுகிறார். இதனால் ஐஷு பதறினாலும், எதார்த்தமாக அதை செய்தது போல் மீண்டும் வேட்டியை சரி செய்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதெல்லாம் வுமன் சேஃப்டியில் வராதா என்ற கேள்வியை பார்வையாளர்கள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கமல் இந்த வாரம் விசாரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top