Connect with us

“நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன Red Card பிரதீப்! இப்படி சொல்லிட்டாரே..!”

Bigg Boss Tamil Season 7

“நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன Red Card பிரதீப்! இப்படி சொல்லிட்டாரே..!”

நடிகர் கமல் ஹாசன் இன்று ( நவ. 7) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு வாங்கி வெளியேறிய பிரதீப், கமல் ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், “ சத்தியமா சொல்றேன். நான் கமல் ஹாசனின் பெரிய ரசிகன். உங்களுக்கு 69 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு உங்கள் கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லவ் யூ நல்ல இருங்க தீரவிசாரிபதேமேய் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பெண் போட்டியாளர்கள் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறார், டாய்லெட் போகும்போது கதவை சாத்தாமல் போகிறார், பெண்களிடம் காதல் செய்ய சொல்கிறார், எல்லை மீறி கெட்ட வார்த்தை பேசி வருகிறார் உள்ளிட்ட காரணங்களால், ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

மேலும் அவரை சேனல் வெளியே அனுப்பவில்லை என்றால், நான் வெளியே சென்று இருப்பேன் என கமல் ஹாசன் கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் கடைசி வாய்ப்பு கூட பிரதீப்பிற்கு கொடுக்கவில்லை என பலரும் கமல் ஹாசனை சாடி வருகின்றனர்.

அதே போல் விசாரித்து இருந்தால் அவரின் நியாயம் வெளியே வந்து இருக்கும், அதை கமல் தடுத்துவிட்டார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதில் கொடுக்க கூட கமல் ஹாசன் அனுமதி தரவில்லை என்றாலும், அவருக்காக பிரதீப் வாழ்த்து கூறியது ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top