Connect with us

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- எதுக்காக தெரியுமா..?

Featured

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- எதுக்காக தெரியுமா..?

தமிழகத்தில் இருக்கும் பல சுற்றுலா தளங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

26.12.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மூன்றாவது சனிக்கிழமை (20.01.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 26.12.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு. தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top