Connect with us

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு…!!

Featured

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் திறமையான வகைபந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர் ஸ்ரீசாந்த் . இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சில வீரர்களுக்கு ஆயுள் தடை விதித்தது.

இதை எதிர்த்து கேரள மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். நீண்ட நெடு போராட்டத்திற்கு பிறகு பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து 13.9.2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது . இந்த தண்டனை காலம் முடிந்ததும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டது . தண்டனை காலம் என்னவோ முடிந்து விட்டது ஆனால் கிரிக்கெட் விளையாட அவரை சேர்த்துக்கொள்ளவில்லை என்பது சற்று வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது கண்ணூரை சேர்ந்த சரீஷ் என்பவர் காவல்துறையில் பணமோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் “கடந்த 2019ம் ஆண்டு ஸ்ரீசாந்த்தின் நண்பர்கள் ராஜிவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகியோர் தன்னை அணுகியதாகவும் . கர்நாடக மாநிலம் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் துவங்க இருப்பதாகவும், அதில் ஸ்ரீசாந்த் பங்குதாரராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த பயிற்சி மையத்திற்கு முதலீடு செய்தால் தன்னையும் பங்குதாரராக நியமிப்பதாக ஸ்ரீசாந்த் நண்பர்கள் தெரிவித்ததாக சதிஷ் தெரிவித்துள்ளார் .

அவர்களை நம்பி 18.7 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் தற்போது வரை விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவில்லை. என் பணத்தையும் அவர்கள் திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாக வருத்தத்துடன் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஸ்ரீசாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் மீது ஐபிசி பிரிவு 420ன் கீழ் பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

More in Featured

To Top