Connect with us

தென்னாப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா – சோதனை கடந்து சாதனை படைத்த ராகுல் தலைமையிலான இந்திய அணி..!!

Featured

தென்னாப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா – சோதனை கடந்து சாதனை படைத்த ராகுல் தலைமையிலான இந்திய அணி..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடயிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரையும் கைப்பற்றி கெத்து காட்டியுள்ளது .

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இதில் உலக புகழ் பெற்ற போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது . இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ரஜித் பட்டிதார் களமிறங்கினர்.

அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் மற்றும் ரஜித் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதையடுத்து சஞ்சு சாம்சனுடன் கேப்டன் ராகுல் கை கோர்த்தார். இருவரும் நிதானமாக ஆட நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்களில் கேப்டன் ராகுல் அவரது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து சஞ்சுவுடன் இளம் வீரர் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார் . இருவரும் விக்கெட்டுகளை விடாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .பொறுப்புடன் ஆடிய இவர்கள் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர். சிறப்பாக ஆடிவந்த திலக் வர்மா 52 ரங்களில் ஆட்டமிழக்க சாம்சனுடன் ரிங்கு சிங் கூட்டணி அமைத்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆதி வந்த சஞ்சு சாம்சன் சதம் விளாசி ஆனார் இதையடுத்து அதிரடியில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 114 பந்துகளில் 108 ரன்களில் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.இறுதியில் சற்று அதிரடி காட்டிய ரிங்கு ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது . இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டோனி மற்றும் ரீசா ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதில் பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரீசா19 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து டோனியுடன் rassie ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் டோனி அதிரடியில் மிரட்ட மறுபக்கம் rassie 2 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார் .

இதையடுத்து டோனியுடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார் வந்த வேகத்தில் அதிரடி காட்டி வந்த மார்க்ரம் 36 ரன்கள் எடுத்தபோது சிறிய தவறால் தனது விக்கெட்டை எளிமையாக விட்டுக்கொடுத்தார்.இதையடுத்து சிறப்பாக விளையாடி வந்த டோனியும் 81 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த அந்த வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சில் அட்டமிழந்து வெளியேறினார் .

See also  பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

இறுதியில் 45வது ஓவரில் அணைத்து விக்கெட்டையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் தொடரையும் விட்டுக்கொடுத்து.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் தொடரையும் வெல்லும் முனைப்பில் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top