Connect with us

“என்ன இன்னும் பிரச்சனை முடியலையா?! துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?!”

Cinema News

“என்ன இன்னும் பிரச்சனை முடியலையா?! துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?!”

சீயான் விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை த்ரில்லர் ஜானரில் செம்ம ஆக்‌ஷன் படமாக துருவ நட்சத்திரத்தை இயக்கினார் கெளதம் மேனன். விக்ரம் ஜான் என்ற ஸ்பை கேரக்டரில் நடிப்பதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் 2016ம் ஆண்டு தொடங்கியது. சீயான் விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா, பார்த்திபன், விநாயகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கெளதம் மேனனின் ட்ரீம் மூவியான துருவ நட்சத்திரம், ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நின்று போனது. பின்னர் இந்தப் படத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் கெளதம் மேனன். இதனையடுத்து பல படங்களில் நடித்து, அதன் மூலம் துருவ நட்சத்திரம் படத்தை முழுமையாக முடித்துவிட்டார். ஆனாலும் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து பல பிரச்சினைகள் எழுந்தன.

ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் போன்றவை காரணமாகவும் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போவதாக சொல்லப்பட்டது. இறுதியாக துருவ நட்சத்திரம் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. அதேநேரம், துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு கன்ஃபார்ம் செய்தது. அதன்படி இந்தப் படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவையும் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் தற்போது மீண்டும் துருவ நட்சத்திரம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய தியேட்டர் பிரிண்ட்கள் ரெடியாகிவிட்டாலும், சில ஃபைனான்ஸ் பிரச்சினை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக துருவ நட்சத்திரம் ரிலீஸ் 24ம் தேதியில் இருந்து தள்ளி வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுபற்றி இன்னும் அபிஸியலாக அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்த ஃபைனான்ஸ் பிரச்சினைகள் விரைவில் முடிவுக்கு வரும் எனவும், துருவ நட்சத்திரம் சொன்ன தேதியில் ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனது மகன் நாக சைத்தன்யா திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசு வாங்கிய நாகர்ஜுனா!

More in Cinema News

To Top