Connect with us

இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா..? – பரப்புரையில் பகீர் கிளப்பிய ப.சிதம்பரம்

Featured

இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா..? – பரப்புரையில் பகீர் கிளப்பிய ப.சிதம்பரம்

மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு மக்கள் முன் எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா? பல நாடுகள் பார்வையில் இந்தியா அழிவைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறது

நான் அச்சமூட்டுவதாக நினைக்க வேண்டாம்.. ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால்.. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான்.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 3 பேர் முதலமைச்சராக இருந்தனர். அதில் முத்தான ஒரு திட்டத்தை யாராவது சொல்ல முடியுமா?

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் எத்தனை எத்தனைத் திட்டங்கள்

காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலருக்கு விற்பனையானபோதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹75, டீசல் ₹65-க்கு விற்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 80 டாலராக குறைந்துள்ளபோதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100-க்கு விற்பனையாகிறது.

மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை கைது செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு என கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை. ஏன் நாவலிலும் கூட படித்ததில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏற்காடு பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Featured

To Top