Connect with us

IPL 2024 : ஷஷாங் சிங்கின் அதிரடியால் குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி..!!!

Featured

IPL 2024 : ஷஷாங் சிங்கின் அதிரடியால் குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை பஞ்சாப் அணி கெத்தாக வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், ரித்திமான் சாஹா ஆகியோர் களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரித்திமான் சாஹா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரும் 26 ரன்களில் அவுட்டானார் .

இறுதி வரை கம்பீரமாக ஆடிய சுப்மன் கில் 48 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 199 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களத்தில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவன், 1 ரன்னில் போல்ட் ஆக . பேர்ஸ்டோவும் , 22 ரன்களில் வீழ்ந்தார் . பிரப்சிம்ரன் சிங், 35 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற . சாம் கரன் 5 ரன்களிலும், சிக்கந்தர் ரஸா 15 ரன்களிலும் வெளியேறினர்.

ஷஷாங் சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர். ரஷித் கான் வீசிய 16-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி, மூன்றாவது சிக்ஸருக்கு முயன்று ஆட்டமிழந்தார் ஜிதேஷ். இம்பேக்ட் வீரராக அஷுதோஷ் சர்மா களம் கண்டார். அவருடன் இணைந்து ஷஷாங் சிங் இன்னிங்ஸில் அதிரடி காட்ட 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த அஷுதோஷ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கான ரன்களை 19.5 பந்துகளில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது . இதில் ஷஷாங் சிங், 29 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

See also  தனி ஆளாக போராடிய ருதுராஜ் - பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு..!!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top