Connect with us

நம்ப புடி எப்பவும் தவறாது – குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது சி.எஸ்.கே அணி..!!

Featured

நம்ப புடி எப்பவும் தவறாது – குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது சி.எஸ்.கே அணி..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் நேற்று சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது .

ரசிகர்களுடன் ஆரவாரத்துடன் நடைபெறும் இப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு செய்தது .

இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் – ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர் .

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இந்த ஜோடி குஜராத்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரச்சின் 46 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரை தொடர்ந்து களத்துக்கு வந்த ரஹானே, ருதுராஜுடன் கைகோத்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்காமல் 12 ரன்களில் பெவிலியன் நோக்கி சென்றார் . அடுத்து வந்த ஷிபம் தூபே வந்த வேகத்தில் 2 சிக்சர்களை விளாசி சி.எஸ்.கே ரசிகர்களை குசியாக்கினார் .

ஒரு பக்கம் தூபே அதிரடி காட்ட மறுபுறம் பொறுப்புடன் விளையாடி வந்த ருதுராஜ், 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார் .

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த தூபே அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து களத்துக்கு வந்த சமீர் ரிஸ்வி வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி 206 ரன்களைச் குவித்தது . இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது.

ஆரம்பம் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குஜராத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர் .

கடைசி ஓவரின் கடைசி சில பந்துகளில் உமேஷ் யாதவ் குஜராத் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் வகையில் சில சூப்பர் ஷாட்டுகளை அடித்தார்.

9இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணி தனது தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top