Connect with us

‘ஸ்டார்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் கவின் – சிறப்பான சம்பவம் லோடிங்..!!

Cinema News

‘ஸ்டார்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் கவின் – சிறப்பான சம்பவம் லோடிங்..!!

கவின் நடிப்பில் படுபயங்கரமாக உருவாகி வரும் ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் கவின் நிறைவு செய்துள்ளதாக புகைப்படத்துடன் சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற மெகா ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பெற்றவர் தான் கவின்.

சீரியலை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய கவினுக்கு முதல் படமே தாறுமாறான வெற்றியை கொடுத்தது .

இதையடுத்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்த கவினுக்கு அப்படமும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது கணேஷ் கே பாபு இயக்கிய இந்த படமும் கவினுக்கு அசத்தலான வெற்றியை தேடி தர தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுநாள் வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து படத்தின் அடுத்த கட்ட பணிகள் இனிதே தொடங்கியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் ரசிகர்களின் ஆசைக்கினைங்க ஸ்டார் படத்தில் இருந்து ஒரு சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் கவின் வெற்றிகரமாக முடித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

இதுவரை கவின் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில் ஸ்டார் படமும் அவருக்கு வெற்றியை தேடி தருமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசுர பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை அசால்டாக வீழ்த்தியது பெங்களூரு அணி..!!!

More in Cinema News

To Top