Connect with us

போட்டியில் வெல்ல கை வலிக்க கால் கடுக்க நிற்கிறார்கள் போட்டியாளர்கள் – இறுதியில் வெல்லப்போவது யார்..?

Bigg Boss Tamil Season 7

போட்டியில் வெல்ல கை வலிக்க கால் கடுக்க நிற்கிறார்கள் போட்டியாளர்கள் – இறுதியில் வெல்லப்போவது யார்..?

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள இரண்டாவது ப்ரோமோ தாறுமாறாக அமைந்துள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7ல் இறுதி மேடையை அலங்கரிக்கப்போகும் இறுதி போட்டியாளர்களுக்கான TICKET TO FINALE இறுதி போட்டி நடைபெறுகிறது.

ஹோல்டதான் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் TICKET TO FINALE என பெயரிடப்பட்டுள்ள போர்டில் அவர்களது கையை வைக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறது இறுதி வரை போர்டில் இருந்து எந்த போட்டியாளர் கையை எடுக்காமல் இருக்கிறாரோ அவர் தான் FINALE டிக்கெட்டை வென்று இறுதிப்போட்டிக்கு செல்வார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த இறுதி போட்டியை கடுமையாக எதிர்கொள்கின்றனர் திட்டத்தட்ட 4 மணிநேரம் போட்டியாளர்கள் அனைவரும் வைத்த கையை எடுக்காமல் போட்டியில் வெல்ல கை வலிக்க கால் கடுக்க நிற்கிறார்கள்.

அப்போது விஷ்ணு தான் தற்போது முன்னிலையில் இருக்கிறார் எக்காரணத்திற்காகவும் விஷ்ணு இறுதிப்போட்டில் வெல்ல கூடாது ஒன்னு நீ இல்லை நான் தான் இந்த போட்டியில் வெல்லணும் என பூர்ணிமா மாயாவிடம் கூற ப்ரோமோ அபப்டியே முடிகிறது.

இந்நிலையில் தினம் தினம் நடக்கும் இந்த TICKET TO FINALE டாஸ்கின் இறுதியில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top