Connect with us

அந்த சத்தம் இருக்கே எப்பப்பப்பா – கொல்கத்தாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி..!!!

Featured

அந்த சத்தம் இருக்கே எப்பப்பப்பா – கொல்கத்தாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை அணி தனது 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் உலக புகழ் பெற்ற சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் CSK – KKR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் KKR அணிக்கு எதிராக டாஸ் வென்ற CSK அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக நரைன் – ஃபில் சால்ட் களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சால்ட் டக் அவுட்டாக நரேனும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி – கேப்டன் ஷ்ரேயசுடன் இணைந்து நிதானமாக விளையாட அவர்களும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க . இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 137 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களத்தில் பேட்டிங் செய்து செய்தது . அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் ரிச்சின் ரவீந்திர மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர்.

சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் நல்லபடியாக ஆடி வந்த நிலையில் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த ரிச்சின் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த மிச்சேல் 27 ரன்களில் ஆட்டமிழக்க மறுபக்க பொறுப்பாக விளையாடிய ருதுராஜ் அதிரடியில் மிரட்டி அரைசதம் கடந்து அசத்தினார்.

போட்டியில் வெல்ல சென்னை அணிக்கு 3 ரன்கள் தேவை பட்ட நிலையில் சிறப்பாக ஆடி வந்த துபே ஆட்டமிழக்க ரசிகர்களின் ஆரவாரத்துடன் எம்.எஸ்.தோனி களத்திற்கு கெத்தாக வந்தார்.

பின்னர் தோனி 6 அடித்து ஆட்டத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டென்று சிங்கள் கொடுத்து ஆட்டத்தை கேப்டன் ருதுராஜிடம் கொடுத்தார் தோனி . இதையடுத்து ருதுராஜ் ஆட்டத்தை சிறப்பாக முடித்து கொடுக்க சென்னை அணி அபார வெற்றியை ருசித்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Featured

To Top