Connect with us

அரண்மனையாக மாறிய பிக் பாஸ் வீடு – சர்வாதிகார ஆட்சி செய்யும் நிக்சன்..!! புதிய ப்ரோமோ..

Bigg Boss Tamil Season 7

அரண்மனையாக மாறிய பிக் பாஸ் வீடு – சர்வாதிகார ஆட்சி செய்யும் நிக்சன்..!! புதிய ப்ரோமோ..

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வந்துள்ள ப்ரோமோ செம வைரல் ஆகி வருகிறது .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தினசரி எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 2 மாதங்கள் வெற்றிகரமாக ஆன நிலையில் ஆட்டம் தற்போது கலைக்கட்டியுள்ளது . அதிலும் குறிப்பதாக இந்த வார கேப்டனாக இருக்கும் நிக்சனுக்கு போட்டியாளர்களும் பிக் பாஸ் அவர்களும் பல சவால்களை கொடுத்து நிக்சனின் பொறுமையை ரொம்பவே சோதித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்குமான புதிய ப்ரோமோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது . அந்த புரோமோவில் பிக் பாஸ் வீடு அரண்மனையாக உள்ளதாகவும் இந்த வார கேப்டனான் நிக்சன் அதில் ராஜாவாகவும் இருப்பது போல் தெரிகிறது. போட்டியாளர்கள் அனைவரும் நிக்சனுக்கு ராஜா உடையை போட்டுவிட நிக்சன் உடனே விக்ரமை கைது செய்ய உத்தரவிடுகிறார் .

இதனை ஏற்க மறுக்கும் விக்ரம் இது சர்வாதிகார ஆட்சி என்று கூக்குரல் விட நிக்சனும் ஆமா இது சர்வாதிகார ஆட்சி தான் என பதிலுக்கு பதில் திமிரு பேச்சு பேச ப்ரோமோ அப்படியே முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top