Connect with us

🔥 ரீ-ரிலீஸிலும் ராஜா! 15.5 கோடி வசூல் செய்த ‘படையப்பா’

Cinema News

🔥 ரீ-ரிலீஸிலும் ராஜா! 15.5 கோடி வசூல் செய்த ‘படையப்பா’


1999ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டான படையப்பா, ரீ-ரிலீஸாக மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் நடிப்பு, கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கம், ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஆகியவை இன்றும் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதை இந்த ரீ-ரிலீஸ் நிரூபித்துள்ளது.

திரையரங்குகளில் விசில், கைதட்டல், நடனம் என ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, படம் ரீ-ரிலீஸில் உலகளவில் இதுவரை சுமார் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகும் படையப்பா காட்டும் இந்த மாபெரும் வரவேற்பு, ரஜினிகாந்தின் ரசிகர் வட்டத்தின் வலிமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘பத்தா’ – 4 நாட்களில் விஜய் சேதுபதி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Cinema News

To Top