Connect with us

“‘டியூட்’ படம்: Oorum Blood பாடல் நூறு மில்லியன் சாதனை!”

Cinema News

“‘டியூட்’ படம்: Oorum Blood பாடல் நூறு மில்லியன் சாதனை!”

இயக்குநர் சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் – மமிதா பைஜூ இணைந்து நடித்த படம் ‘டியூட்’. சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தீபாவளி (17ம் தேதி) வெளியானது.

வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படத்தின் ஹிட் பாடல் “Oorum Blood” தற்போது 100 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. இதை உற்சாகமாக பகிர்ந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ரசிகர்களுக்கு “லவ் யூ மக்களே” என்று நன்றி தெரிவித்தார்.

சாய் அபயங்கர், சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ உட்பட பல படங்களுக்கும் தற்போது இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருமணத்திற்குப் பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா – வைரலான வீடியோ

More in Cinema News

To Top