Connect with us

“Thalapathy 68 படத்தில் நடிகர் ஜெயராமின் Character இதுதானா?! ஜெயிலர் படத்தின் மாஸ் கேரக்டருக்கு இணையானது!”

Cinema News

“Thalapathy 68 படத்தில் நடிகர் ஜெயராமின் Character இதுதானா?! ஜெயிலர் படத்தின் மாஸ் கேரக்டருக்கு இணையானது!”

’ஜெயிலர்’ படத்தில் நடித்த மாஸ் கேரக்டருக்கு இணையானது ’தளபதி 68’ படத்தில் என்னுடைய கேரக்டர் என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், AGS நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில், அதனை அடுத்து தாய்லாந்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், மற்றும் வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தன்னுடைய கேரக்டர் குறித்து நடிகர் ஜெயராம் பேசிய போது ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடித்த மாஸ் கேரக்டர் போன்றது தளபதி 68 படத்தில் என்னுடைய கேரக்டர் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் இந்த படத்தில் ஒரு மாஸ் ஆக்சன் அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AGS நிறுவனத்தின் 25 ஆவது படமாகவும், வெங்கட் பிரபுவின் 12வது படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தில் சித்தார்த் மணி ஒளிப்பதிவாளராகவும், வெங்கட்ராஜ் எடிட்டராகவும், ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மத்திய பாதுகாப்புதுறை அமைச்சரை சந்தித்த அமரன் படக்குழு - காரணம் என்ன தெரியுமா..?

More in Cinema News

To Top