Connect with us

இயக்குனர் ஷங்கரின் மருமகன் பிரபல ஐடி கம்பெனியின் முதலாளியா..? வெளியான டக்கர் தகவல்..!!!

Cinema News

இயக்குனர் ஷங்கரின் மருமகன் பிரபல ஐடி கம்பெனியின் முதலாளியா..? வெளியான டக்கர் தகவல்..!!!

இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தற்போது தருண் கார்த்திகேயன் குறித்த டக்கர் தகவல் வெளியாகி உள்ளது .

இந்திய சினிமாவில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர் .திரை வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ அதே போல் தனது சொந்த வாழ்க்கையிலும் பிரம்மாண்டமாக வாழ்ந்து வருகிறார்.

இவருக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் . இந்நிலையில் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் சில பல காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டனர் .

இந்நிலையில், ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்தி என்பவருடன் , ஐஸ்வர்யா ஷங்கருக்கு கடத்த சில நாட்களுக்கு முன் இரண்டாம் திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நயன்தாரா விக்னேஷ் சிவன் , அட்லீ, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என பல உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா சங்கர் மணமுடித்திருக்கும் தருண் கார்த்திகேயன் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்று இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் குறித்து மேலும் ஒரு டக்கர் தகவல் வெளியாகி உள்ளது .

தருண் கார்த்திகேயன் அமெரிக்காவில் ஐடி படித்தவர், இவரது அப்பா அங்கு ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். இயக்குனர் ஹரியும், தருணின் தந்தையும் நண்பர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா ஆசையால் இந்தியா வந்த தருண் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை பிரியங்கா மோகன் சேலையில் Cute போட்டோஷூட் Viral..

More in Cinema News

To Top