Connect with us

ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல – பகீர் கிளப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

Featured

ஆபாச படங்களை பார்ப்பது குற்றமல்ல – பகீர் கிளப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல; மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சட்டப்படி குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது .

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல; மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சட்டப்படி குற்றம் என சொல்லி வழக்கை ரத்து செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் கொடுத்து இந்த பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் கூறியதாவது :

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல; மற்றவர்களுக்கு அதை அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்

90’s Kids எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல 2K Kids ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்குமளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும்.

பள்ளிகளில் இருந்தே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதில் இருந்து வெளியில் வர ஒன்று அந்த தளங்களை முடக்கிகொன்டெ இருக்க வேண்டும் இல்லையென்றால் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் அவர்களாக திருந்தினால் மட்டுமே இதுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!

More in Featured

To Top