Connect with us

நீங்களாவது இருக்கீங்களே மேடம் – நயன்தாராவிற்கு ஆதரவு குரல் கொடுத்த நடிகை பார்வதி..!!

Cinema News

நீங்களாவது இருக்கீங்களே மேடம் – நயன்தாராவிற்கு ஆதரவு குரல் கொடுத்த நடிகை பார்வதி..!!

நடிகை நயன்தாராவின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தை நீக்கியதற்கு பிரபல மலையாள நடிகையான பார்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி நயன்தாராவின் 75வது படமான இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் டீசெண்டான வரவேற்பை பெற்ற இப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது .

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு வட இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வந்ததால் நெட்பிளிக்ஸ் தளத்தையும் அன்னபூரணி படத்தையும் தடை செய்யக்கோரி எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து கண்டனங்கள் தொடர்ந்து வலுத்து வந்ததால் அன்னபூரணி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில்,இந்த படத்தை நீங்கியதற்கு பலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில் தற்போது அன்னபூரணி படத்திற்கும் நயன்தாராவுக்கும் பிரபல மலையாள நடிகை பார்வதி ஆதரவாக பேசியுள்ளார். மேலும் இது ஒரு ஆபத்தான முன் உதாரணம் என்றும் அவர் விமர்சித்து உள்ளார்.

இப்படத்தில் இத்தனை பிரச்சனை வந்திருந்தாலும் இதுகுறித்து நடிகை நயன்தாரா எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 ஆண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை வெல்லுமா மும்பை - டாஸ் வென்ற MI பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Cinema News

To Top