Connect with us

உலக கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி நிச்சயம் இந்த சாதனையை செய்வார் – அடித்து சொல்லிய சுரேஷ் ரெய்னா

Uncategorized

உலக கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி நிச்சயம் இந்த சாதனையை செய்வார் – அடித்து சொல்லிய சுரேஷ் ரெய்னா

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியில் விராட் கோலி எப்படி ஆடுவார் எந்த ஒரு சாதனையை செய்யப்போகிறார் என்ற தனது கணிப்பையும் எதிர்பார்ப்பையும் பற்றி இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை பிற்பகல் ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது .

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் அபாரமாக ஆடி இறுதி போட்டி வரை வந்துள்ளது . இந்த தொடரில் பேட்டிங் , பவுலிங் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதே இந்திய அணியின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணம் . அதிலும் குறிப்பாக கேப்டன் ரோஹித் , விராட் கோலி , கில் , ஷ்ரேயஸ் , ஷமி என பல வீரர்கள் பல அற்புதமான சாதனைகளை படைத்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியில் விராட் கோலி எப்படி ஆடுவார் எந்த ஒரு சாதனையை செய்யப்போகிறார் என்ற தனது கணிப்பையும் எதிர்பார்ப்பையும் பற்றி இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

பெரிய போட்டிகளில் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட வீரர் விராட் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி தனது 51வது சதத்தை விளாசுவார் என நான் நினைக்கிறேன்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன்களை குவிப்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்கு எதிராக 8 சதங்களை விளாசியுள்ளார். இம்முறையும் நிச்சயம் சதம் அடிப்பார் என இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்னா தாஸ்..!!!

More in Uncategorized

To Top