Connect with us

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்..? காரணம் என்ன தெரியுமா…

Featured

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்..? காரணம் என்ன தெரியுமா…

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தியாவுக்கு சுற்று பயணம் கொண்டிருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியும் இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜன.25-ம் தேதி நடைபெற உள்ளது .

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்த இங்கிலாந்து அணி அபு தாபியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது .

.இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட செய்தியில் கூறிருப்பதாவது :

சொந்த காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் இருந்து மட்டும் விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ளர். மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பிசிசிஐ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top