Connect with us

வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு சந்தானம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Uncategorized

வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு சந்தானம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிப்பதற்காக சந்தானம் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் நண்பனாக திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் சந்தானம் .

உச்சநட்சத்திரங்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் வரை அனைத்திலும் காமெடியியல் கலக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் .

இதையடுத்து தமிழ் சினிமாவின் கலக்கல் நாயகனாக வலம் வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மேகா ஆகாஷ், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் கடந்த நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்காக சந்தானம் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அதன்படி சந்தானம் இப்படத்தில் நடிக்க சுமார் 8 கோடி ருபாய் சம்பளமாக பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக நகைச்சுவைகும் நகைச்சுவை படங்களுக்கும் பெயர்போன நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த டக்குப்பட்டி ராமசாமி அவருக்கு வெற்றியை தேடி தருமா இல்லையா என்பதை நம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Uncategorized

To Top