Connect with us

என்னப்பா எல்லாம் ரெடியா : IPL தொடக்க விழாவில் இசைப்புயலின் பிரம்மாண்ட கச்சேரி..!!!

Uncategorized

என்னப்பா எல்லாம் ரெடியா : IPL தொடக்க விழாவில் இசைப்புயலின் பிரம்மாண்ட கச்சேரி..!!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் இதில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தங்களை தீவிரமாக ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட அணைத்து அணிகளும் பயிற்சினை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது .

இந்நிலையில் நடப்பாண்டுக்கான IPL தொடக்க விழா நாளை மறுநாள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த தொடக்க விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்ட்டரும் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Uncategorized

Advertisement
 

Trending

 
Advertisement
To Top