Connect with us

இது என்னப்பா ஆப்பிள் நிறுவனத்திற்கு வந்த சோதனை – அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை போட்டது அந்நாட்டு அரசு

Featured

இது என்னப்பா ஆப்பிள் நிறுவனத்திற்கு வந்த சோதனை – அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை போட்டது அந்நாட்டு அரசு

அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து அந்நாட்டு அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகில் இருக்கும் அணைத்து மக்களாலும் பெரிதளவில் கவரப்பட்ட செல் போன்களில் ஒன்று தான் ஆப்பிள் நிறுவனத்தின் I PHONE . மிகவும் பிரமியமான இந்த போன்களை திரை பிரபலங்கள் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பலரும் இதனை வாங்கி வருகின்றனர்.

தொழில்நுட்ப உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ள ஆப்பிள் நிறுவனம் இன்று வரை அதிக லாபத்தை ஈட்டும் தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது . இந்நிலையில் இந்நிறுவனம் போன்களை தாண்டி I WATCH உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து அதிலும் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்படி உலகம் முழுவதும் பிரபலமடைந்து வேற லெவலில் வெற்றிநடைபோட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்போது புதிய சிக்கல் வந்துள்ளது. அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து அந்நாட்டு அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது . வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள ‘Pulse Oximeter’ தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தக் கோரி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏற்காடு பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Featured

To Top