Connect with us

“எடப்பாடி பழனிசாமி அவர்களே.. நீங்கள் விவசாயி அல்ல விஷவாயு” – பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!!

Featured

“எடப்பாடி பழனிசாமி அவர்களே.. நீங்கள் விவசாயி அல்ல விஷவாயு” – பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!!

ஏதோ அவர்தான் கடைசி விவசாயி என்பதுபோல் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நீங்கள் விவசாயி அல்ல, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்து விவசாயிகள் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட முயன்ற விஷவாயு என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கு கூடி இருந்த திரளான மக்கள் முன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் .

பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :

உதயநிதி அரசியலுக்கு வந்ததால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்?” என்று கேட்கிறார் பாதம்தாங்கி பழனிசாமி. திராவிடத்தின் எதிரிகளையும், திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிசாமி போன்ற துரோகிகளையும், தினமும் இப்படிக் கதற விடுகிறாரே… அதற்குத்தான் வந்திருக்கிறார்.

ஏதோ அவர்தான் கடைசி விவசாயி என்பதுபோல் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நீங்கள் விவசாயி அல்ல, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்து விவசாயிகள் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட முயன்ற விஷவாயு

பா.ஜ.க. பிளான்படி, பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் தி.மு.க.விற்கு வராமல் தடுக்கத் தனியாக நிற்கிறீர்கள். உங்களால் அ.தி.மு.க. வாக்குகளையே வாங்க முடியாது. இதில் எப்படி ஓட்டு பிரியும்? உங்கள் கட்சிக்காரர்களே, உங்கள் பச்சோந்தித்தனத்தால் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். ஏன் என்றால், அந்தளவுக்கு பழனிசாமியின் துரோக வரலாறு உலக பேமஸ்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விடம் இருக்கும் தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். இது உறுதி! இதை ஆணவத்தில் சொல்லவில்லை! தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த, செய்யப் போகும் நன்மைகள்மேல் நம்பிக்கை வைத்தும், மக்களைவிட எனக்கு வேறு துணை கிடையாது என்ற நம்பிக்கையிலும் சொல்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

More in Featured

To Top